/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் வழிபாடு
/
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் வழிபாடு
ADDED : அக் 08, 2025 12:40 AM

கடலுார்; திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த வேல்வழிபாட்டில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பங்கேற்றார்.
மதுரையில் ஜூன் மாதத்தில் நடந்த முருகன் மாநாடு தீர்மானத்தின்படி ஐப்பசி மாத கந்த சஷ்டி விழாவில் மூன்று நாட்களுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை, கந்த பாராயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆறுபடை வீடுகளிலும் புரட்டாசி பவுர்ணமி அன்று வேல்வழிபாடு நடந்தது. திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் வேல் வழங்கும் விழா இசையமைப்பாளர் கங்கை அமரன் தலைமையில் நடந்தது.
கடலுார் மாவட்டம் சார்பில் விபாக் சேவை அமைப்பாளர் ஜோதி குருவாயூரப்பன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சண்முக ஹரிதாசன் பங்கேற்று வேல் பெற்றனர்.