/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை
/
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை
ADDED : அக் 26, 2025 03:17 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் திரு.வி.க., நகரில், விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், வேல் பூஜை மற்றும் கந்த சஷ்டி விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் ஹரிதாசன் முன்னிலையில், விழாவை மாவட்ட பூசாரிகள் அமைப்பாளர் கலைமணி துவக்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் ஞானகுரு வேல் பூஜை குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட பஜரங்தள் அமைப்பாளர் ஆசைத்தம்பி முன்னிலையில், திருவிளக்கு பூஜையை மாநில தர்மயாத்ரா அமைப்பாளர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்.எஸ்.எஸ்., நகர செயலாளர் விஸ்வநாதன், இணை செயலாளர் ஜெயராமன், திரு.வி.க., நகர் அமைப்பாளர் முத்து சுப்ரமணியன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நகர பிரதிநிதி ஜெயராமன், ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ஹரிபாஸ்கர், நகர தலைவர் அருள்ஜோதி பங்கேற்றனர்.
விழாவில் திரளான ெபாதுமக்கள் பங்கேற்று வேலுக்கு அபிஷேகம் செய்தனர். பின், முருகனுக்கு வேல் சாற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. குறிஞ்சிப்பாடி ஒன்றிய அமைப்பாளர் மணிகண்ட செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடலுார் மேற்கு ஒன்றிய அமைப்பாளர் � ராம் நன்றி கூறினார்.

