/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
/
வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : பிப் 04, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி வேணுகோபால பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
அதையொட்டி, கடந்த 1ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மாலை 6:00 மணிக்கு கும்ப ஸ்தாபனம், இரவு 8:30 மணிக்கு சாற்று முறை நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், காலை 11:30 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது.
நேற்று கும்பாபி ேஷகத்தையொட்டி, காலை 6:30 மணிக்கு பிரதிஷ்டா ேஹாமம், 8:45 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 10:00 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்தனர். அமைச்சர் கணேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.