/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில அளவிலான போட்டியில் வெற்றி; வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ADDED : டிச 19, 2024 06:36 AM

சிதம்பரம்; மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வீனஸ் குழும பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 8 ம் தேதி நடைபெற்ற, 14வது மாநில அளவிலான யோகா, கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் வீனஸ் குழுமப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்தனர்.
சிலம்பம் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில், மாணவர்கள் பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்றுள்ளனர். கராத்தே போட்டியில், 60 மாணவர்கள், முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், கராத்தே மாஸ்டர் குமரகுரு, சிலம்பம் மாஸ்டர் ராஜேஸ்குமார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களை தாளாளர் குமார், இணை தாளாளர் ரூபியால் ராணி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் நரேந்திரன், மழலையர் பள்ளி முதல்வர் லியோபெஸ்கி ராவ், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் போனிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.