/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கராத்தே போட்டியில் வீனஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
கராத்தே போட்டியில் வீனஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : டிச 12, 2024 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; விருத்தாசலத்தில், 14 வது மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டி நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், சிதம்பரம் வீனஸ் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவ, மாணவிகள் அர்ஜூன், பிரேம் மித்தேஷ், முகுந்தன், அபிஷேக், அச்சனேஷ்வரன், தருண்ராஜ், அகிலன், ஷாகின், தர்ஷினி, பவித்ரன், சமீரா, மித்ரன், விவான் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அவர்களை பள்ளி தாளாளர் வீனஸ் குமார் பாராட்டி வாழ்த்தினார்.
முதல்வர் ராதிகா, சிலம்ப பயிற்சியாளர் ராஜேஷ்குமார், கராத்தே பயிற்சியாளர் குமரகுரு, உடற்பயிற்சி ஆசிரியை வடிவுக்கரசி ஆகியோரையும் பாராட்டினார்.