/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூர் கிராம சபை கூட்டம்: பொது மக்கள் வாக்குவாதம்
/
வேப்பூர் கிராம சபை கூட்டம்: பொது மக்கள் வாக்குவாதம்
வேப்பூர் கிராம சபை கூட்டம்: பொது மக்கள் வாக்குவாதம்
வேப்பூர் கிராம சபை கூட்டம்: பொது மக்கள் வாக்குவாதம்
ADDED : ஆக 16, 2025 03:28 AM

வேப்பூர்: வேப்பூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், வேப்பூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் நேற்று 10:45 மணிக்கு நடந்தது.
நல்லுார் சத்துணவு பிரிவு துணை பி.டி.ஓ., செல்வகுமாரி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் வெங்கடேசன் வரவேற்றார். அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஊராட்சியில் முறைகேடுகள் நடப்பதால், நேரில் வந்து வரவு செலவு பார்க்க வேண்டும் எனக் கூறி துணை பி.டி.ஓ., செல்வகுமாரியிடம் அ.தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார், காங்., நிர்வாகி ராய் பிள்ளை மற்றும் வி.சி., நிர்வாகிகள் வாக்கு வாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த நல்லூர் பி.டி.ஓ., முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.