ADDED : நவ 18, 2025 06:37 AM

நடுவீரப்பட்டு: கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடுவீரப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் வாண்டராசன்குப்பத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தி.மு.க., கடலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். கூட்டுறவு கடலுார் சரக துணைப்பதிவாளர் துரைசாமி, கால்நடை உதவி இயக்குனர் வேங்கடலட்சுமி, டான்பெட் மண்டல மேலாளர் வைரமணி முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை மருத்துவர்கள் மானதி, அழகு முத்தையன், சோமசுந்தரம், கால்நடை ஆய்வாளர்கள் ஆறுமுகம், சதீஷ்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர்கள் கால்நடைகளை பரிசோதனை செய்து குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, சினை ஊசி, மலடு நீக்க சிகிச்சை அளித்தனர்.
கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துக்கான தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க செயலாட்சியர் வேலாயுதம், கூட்டுறவு சங்க சார் பதிவாளர்கள், செயலர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

