/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி.சீயோன் பள்ளியில் கிக் பாக்ஸிங்கில் வெற்றி
/
எஸ்.டி.சீயோன் பள்ளியில் கிக் பாக்ஸிங்கில் வெற்றி
ADDED : ஆக 07, 2025 02:27 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளியில் கிக்பாக்ஸிங் போட்டியில் மாநில அளவில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
மத்திய அரசின் கோலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்ஸிங் லீக் போட்டி,தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டி சென்னை கீழ்பாக்கம் நேரு பார்க்கில் நடந்தது.
இந்த போட்டியில் 18 மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் விளையாடினர்.
இப்போட்டியில் விளையாடிய பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளி கார்த்திகா முதல்பரிசையும், மாணவி அட்சயா இரண்டாம் பரிசு வென்றார்.
மாநில அளவில் கிக் பாக்ஸிங்க் போட்டியில் வென்ற மாணவிகள் கார்த்தி, அட்சாயவை பள்ளி தாளாளர் சாமுவேல் சுஜின், நிர்வாக இயக்குனர் தீபாசுஜின், தலைமை ஆசிரியர் ஆண்டனிராாஜ், வீருகிக் பாக்ஸிங்க் தலைவர் சென்சாய் ரங்கநாதன் ஆகியோர் பாராட்டினர்.