/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விடியல் பயண திட்டம் கேள்விக்குறி டிரைவர், கண்டக்டர்கள் அடாவடி
/
விடியல் பயண திட்டம் கேள்விக்குறி டிரைவர், கண்டக்டர்கள் அடாவடி
விடியல் பயண திட்டம் கேள்விக்குறி டிரைவர், கண்டக்டர்கள் அடாவடி
விடியல் பயண திட்டம் கேள்விக்குறி டிரைவர், கண்டக்டர்கள் அடாவடி
ADDED : மே 07, 2025 01:16 AM
காட்டுமன்னார்கோவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணிமனையில் இருந்து சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், மணல்மேடு மற்றும் கிராமப்புறங்களுக்கு 12 பிங்க் நிற அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
அரசு டவுன் பஸ்களில் அரசின் மகளிர் விடியல் திட்டத்தில் பல்வேறு தரப்பு பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர். இத்திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் தனியார் பஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், அரசின் மகளிர் விடியல் பயண திட்டத்தை அதிகாரிகள் சரியாக செயல்படுத்தாததால் பெண்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் அனைத்தும், தனியார் பஸ்களுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் உத்தரவின்படியே இயக்கப்படுகிறது. பஸ் நிலையங்களில் அந்தெந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் அரசு டவுன் பஸ்களை நிறுத்துவது இல்லை. எங்காவது ஒதுக்கு புறமாக நிறுத்தி வைத்து விட்டு பஸ் எடுக்கும் நேரம் வந்து விட்டால் போதும் டிரைவர், கண்டக்டர்கள் மட்டும் பஸ்சில் ஏரிக் கொண்டு, வேகமாக வெளியேறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் பெண்கள் இலவச பயணம் செய்ய முடியாமல், தனியார் பஸ்களில் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகர் பகுதியில் உள்ள பல நிறுத்தங்களில் பெண்கள் அரசு பஸ்களில் ஏற முடியாமல் அவதிப்படுகின்றனர். காட்டுமன்னார்கோவில் செல்லும் அனைத்து அரசு டவுன் பஸ்களும் காலியாக செல்கின்றன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அரசின் விடியல் பயணம் திட்டம் கேள்விகுறியாகியுள்ளது.