/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஜய கணபதி ஸ்டோர்ஸ் புதிய கிளை திறப்பு
/
விஜய கணபதி ஸ்டோர்ஸ் புதிய கிளை திறப்பு
ADDED : மே 10, 2025 01:35 AM

கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மாலின் தரைதளத்தில் ஸ்ரீ விஜய கணபதி ஸ்டோர்ஸ் திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி வர்த்தகத்தில் 46 ஆண்டு காலம் அனுபவம்மிக்க விஜய கணபதி ஸ்டோர்ஸ் 7வது கிளை, கடலுார் வி ஸ்கொயர் மால் தரை தளத்தில் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. கடை உரிமையாளர்கள் உதயகுமார், ஷகிலா உதயகுமார், விகேஷ், அக்சயா விகேஷ் வரவேற்றனர்.
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார். வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், ஸ்ரீ வள்ளிவிலாஸ் ரமேஷ், மால் இயக்குனர் சரவணன், புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சிவா, சம்பத், கடலுார் மேயர் சுந்தரி ராஜா, டாக்டர் பிரவீன் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திறப்பு விழா சலுகையாக 6,000 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட கண்டெய்னர், 4,000 முதல் 5,999 ரூபாய் வரை பொருள் வாங்கினால் 8 லிட்டர் கண்டெய்னர், 3,000 முதல் 3,999 ரூபாய் வரை பொருள் வாங்கினால் 5 லிட்டர் கண்டெய்னர், 2,000 முதல் 2,999 ரூபாய் வரை பொருள் வாஙகினால் 1 லிட்டர் வாட்டர் பாட்டில் இலவசமாக வழங்கப்படுகிறது.