ADDED : டிச 30, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில், நகர தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
நகர செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் சங்கர், நகர பொருளாளர் கருணா, நகர துணை செயலாளர் கெஜலட்சுமி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சக்கரபாணி வரவேற்றார்.
மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தினார். நகர துணை செயலாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதி மகேஷ், செந்தில், ஒன்றிய செயலாளர்கள் செம்பை, ஜெயராஜ், சக்திவேல், மாவட்ட வழக்கறிஞரணி துணை செயலாளர் செல்வம், நகர நிர்வாகி செல்வம், ஜெகதீசன், பாலு, ராஜசேகர், ரோகோ, புகழ்மணி, மோகன் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

