/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய அமைச்சரிடம் பா.ஜ., கோரிக்கை மனு
/
மத்திய அமைச்சரிடம் பா.ஜ., கோரிக்கை மனு
ADDED : டிச 30, 2025 05:21 AM

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்கான கணக்கீடு பணியை கைவிட வேண்டுமென, மத்திய அமைச்சரிடம் பா.ஜ., வினர் மனு அளித்தனர்.
நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்திற்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் சதீஷ் சந்திரா துபேவிடம், புவனகிரி தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் முருகன் அளித்த மனு:
கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் என, 15,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள சில பகுதிகளில் என்.எல்.சி.,நிர்வாகம் சார்பில் சுரங்க விரிவாக்க பணிக்காக கணக்கீடு நடந்து வருவதால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கும் சூழல் உள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் இன்றி உள்ளனர். எனவே, என்.எல்.சி., நிர்வாகம் கணக்கீடு பணியை கைவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடலுார் சட்டசபை தொகுதி மேற்பார்வையாளர் சரவணசுந்தரம், ஓ.பி.சி., அணி மாவட்ட துணை தலைவர் ரவீந்திரன், ஒன்றிய பொதுச் செயலாளர் தேவபெருமாள் உடனிருந்தனர்.

