ADDED : டிச 30, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலுார் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மண்டலத் தலைவர் கலைவாணன் தமைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கர், பீமாராவ் பாபுஜி, தினகரன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையன், மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், மாவட்ட செயலாளர் பழனிவேல், மாநில செயலாளர் இளங்கோ உட்பட பலர் பேசினர்.
பொது வினியோகத்தை பலப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தரமான சாக்குகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துணைத் தலைவர் ராஜமுருகன் நன்றி கூறினார்.

