/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கம்மாபுரம் ஒன்றியத்தில் விஜயகாந்த் பிறந்த நாள்
/
கம்மாபுரம் ஒன்றியத்தில் விஜயகாந்த் பிறந்த நாள்
ADDED : ஆக 26, 2025 07:40 AM

விருத்தாசலம்: கம்மாபுரம் வடக்கு ஒன்றிய ஊராட்சிகளில், விஜயகாந்த் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, நடியப்பட்டு ஊராட்சியில் நடந்த விழாவிற்கு, கம்மாபுரம் வடக்கு ஒன்றிய தே.மு.தி.க., செயலாளர் தங்கபொன்தனசேகர் தலைமை தாங்கினார். தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட பொருளாளர் ராஜ், மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய துணை செயலாளர் கனகசபை, பாலா, கேசவேல், விஜி, அஜித் உட்பட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேப் போன்று, இருப்பு, ஊ.மங்கலம், அம்மேரி, பெரியகாப்பாங்குளம் ஊராட்சிகளில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடந்தது.