/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்பு போராட்டம் நடத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு
/
காத்திருப்பு போராட்டம் நடத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு
காத்திருப்பு போராட்டம் நடத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு
காத்திருப்பு போராட்டம் நடத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு
ADDED : ஆக 05, 2025 01:55 AM

சிதம்பரம்:சிதம்பரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் அன்பரசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் துரைராஜ், ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
சிறப்பு அழைப்பாளர் மாநிலத் துணைத் தலைவர் ஜான்போஸ்கோ, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ரவி பேசினர். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பாரதிதாசன், அமைப்பு செயலாளர் திருவேங்கடம், வட்ட தலைவர் ஷேக் சிராஜுதீன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள குறைகேட்பு கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி, கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.