ADDED : ஜன 27, 2024 06:15 AM

கடலுார் : கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சித் தலைவர் சுகந்தி பழனிவேல் தலைமைதாங்கினார். கூடுதல் கலெக்டர் சரண்யா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானா அஞ்சும், துணைத் தலைவர் கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் ஞானசவுந்தரி துரை முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், 'கிராமப் புறங்களில் அனைத்து வீடுகளிலும் கழிவறை உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொட்டி அனைத்து வீடுகளிலும் அமைக்க வேண்டும்' என்றார்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விரைவில் சாலை மறியல் நடத்தப்படும் என கிராம மக்கள் கூறியதால் பரபரப்பு நிலவியது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறி சமாதானம் செய்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, வீரமணி, தாசில்தார் விஜய் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
சேத்தியாத்தோப்பு
பூதங்குடி ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் ஜெயா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோமேதகம், ஒன்றிய கவுன்சிலர் செல்வி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், துாய்மை பாரத இயக்கம், குடிதண்ணீர், தெருவிளக்கு அமைத்தல், தார்சாலை, கிராம தெருக்களின் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடுவீரப்பட்டு
சி.என்.பாளையத்தில், ஊராட்சி தலைவர் மங்களம் வேல்முருகன் தலைமையிலும், குமளங்குளம் ஊராட்சியில் தலைவர் ஜெயலட்சுமி ராஜபாஸ்கர் தலைமையிலும், சிலம்பிநாதன்பேட்டையில் ஊராட்சி தலைவர் தெய்வானை சிங்காரவேல் தலைமையிலும் கிராமசபைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்ட பயனாளிகளை உடனடியாக வீடுகளை கட்ட வலியுறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெண்ணாடம்
கொசப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன், துணைத் தலைவர் அரவிந்த் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பாண்டியன் வரவேற்றார்.
கூட்டத்தில், வரும் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டத்தில் புதிய பணிகள் தேர்வு, சாலை, குடிநீர், தெருவிளக்கு அமைப்பது, பல ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள தொகுப்பு வீடுகள் பணியை நீக்கம் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

