நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி, : புவனகிரி அடுத்த ஆலம்பாடியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகவேல் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜோதிகா வரவேற்றார்.
மேல்புவனகிரி துணை பி.டி.ஓ., பிரணவ், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் குறித்து தணிக்கை ஆய்வு செய்தனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் குறை, நிறைகளை கேட்டறிந்தனர்.