/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சாம்பல் ஏற்றி வந்த லாரிகளை தடுத்த கிராம மக்கள்: நெய்வேலி அருகே பரபரப்பு

ADDED : அக் 30, 2025 07:44 AM

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., சாம்பல் ஏற்றி வந்த லாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்.எல்.சி., இரண்டாவது தெர்மல் சாம்பல் ஏரியிலிருந்து, நிலக்கரி சாம்பலை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் லாரிகள் மூலம் சாம்பல் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் என்.எல்.சி., யை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள லாரி உரிமையாளர்கள் தனியார் நிறுவனத்திடம் எங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் சாம்பல் லாரிகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை 12:15 மணியளவில் ஊமங்கலம் காட்டுக்கூனங்குறிச்சி எல்லையில் சாம்பல் ஏற்றி வந்த லாரிகளை, உள்ளுர் லாரி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஊமங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, மாலை 5:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டு, லாரிகள் விடுவிக்கப்பட்டது.