/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைப்பட்டா வழங்க கோரி கிராம மக்கள் முற்றுகை
/
மனைப்பட்டா வழங்க கோரி கிராம மக்கள் முற்றுகை
ADDED : டிச 29, 2024 06:13 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே மனைப்பட்டா வழங்க கோரி, கிராம மக்கள் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
சிதம்பரம் அடுத்துள்ள பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் அர்சுணன் தலைமையில், ஜெயசங்கர், பாவாடை, ராதாகிருஷ்ணன், குப்புசாமி, ராஜசேகர், காமராஜ், சந்திரசேகர், கண்ணன், ரமேஷ், தேவதாஸ் உள்பட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். தொடர்ந்து, தங்கள் கோரிக்கை வலியுறுத்தி முற்றுகையிட்டு, சப் கலெக்டர் ராஷ்மிராணியிடம் மனு அளித்தனர்.
அதில், சிதம்பரம் அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பல குடும்பங்களுக்கு மனைபட்டா இல்லை. பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனைப்பட்டா கேட்டு முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், எங்கள் பகுதியில் வேறு பகுதியை சேர்ந்தர்களுக்கு மனைப்பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட சப் கலெக்டர், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதையேற்று கலைந்து சென்றனர்.

