ADDED : ஆக 24, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : நெய்வேலி அடுத்த தென்குத்து கிராமத்தில், என்.எல்.சி., நிறுவனத்தால் பாதிப்புக்குள்ளாகும் வானதிராயபுரம், தென்குத்து உள்ளிட்ட கிராமமக்களின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார்.மாவட்டத்தலைவர் கதிரவன், சிவக்குமார், முருகவேல், கலையரசன் முன்னிலை வகித்தனர். மாவட்டவன்னியர் சங்க செயலாளர் வினோத்குமார், கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு திராவிடன், கிராம முக்கியஸ்தர்கள் கொளஞ்சி, பெலிக்ஸ்,பழனிவேல், வெங்கடேசன், பாலசுப்ரமணியன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
என்.எல்.சி.,க்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக் குழு அமைத்து போராட்டங்கள் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.