/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஷவண்டுகள் தாக்கி கிராம மக்கள் காயம்
/
விஷவண்டுகள் தாக்கி கிராம மக்கள் காயம்
ADDED : ஏப் 10, 2025 01:33 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே விஷவண்டுகள் தாக்கி மூதாட்டிகள் உட்பட கிராம மக்கள் பலர் காயமடைந்தனர்.
விருத்தாசலம் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த வைத்திலிங்கம் என்ற விவசாயி தனது வயலில் நேற்று பிற்பகல், மனைவியுடன் மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அருகில் உள்ள மர நிழலில், மூதாட்டிகள் உட்பட சிலர் இளைப்பாறினர்.
அப்போது, முட்புதரில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் திடீரென பறந்து வந்து, வைத்திலிங்கம் உட்பட அங்கிருந்தவர்களை கொட்டியது.
அனைவரும் அலறியடித்தபடி, ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் வைத்திலிங்கம், 46, அவரது மனைவி ராஜலட்சுமி, 38, ஆண்டாள், 70, சுசீலா, 70, உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்.
அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.