/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பு அகற்ற கிராம மக்கள் மனு
/
ஆக்கிரமிப்பு அகற்ற கிராம மக்கள் மனு
ADDED : மே 10, 2025 12:17 AM

விருத்தாசலம்:நெய்வாசல் கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராம மக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
நெய்வாசல் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை, தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்றக்கோரி, நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுநாள் வரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சின்னதம்பி, துணைத் தலைவர் பரமசிவம், மா.கம்யூ., வட்ட செயலாளர்கள் அன்பழகன், கலைச்செல்வன், குமரகுரு உடனிருந்தனர்.