/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
ADDED : ஜூலை 12, 2025 03:39 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த தீவளூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
தீவளூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், கிராம மக்கள், மா.கம்யூ., வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என கூறி, போலீசார் ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், கிராம மக்கள், மா.கம்யூ., வட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் கலைச்செல்வன், குமரகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சமாதானம் செய்தார்.
அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.