/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஷெட்டை அகற்ற சென்ற வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
/
ஷெட்டை அகற்ற சென்ற வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ஷெட்டை அகற்ற சென்ற வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ஷெட்டை அகற்ற சென்ற வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ADDED : மே 21, 2025 11:42 PM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மீனவ கிராமத்தில் வீட்டிற்கு முன்பு போடப்பட்டிருந்த ஷெட்டை அகற்ற சென்ற வனத்துறையினரை நேற்று கிராம பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை அடுத்த வடக்கு சின்னுார் மெயின்ரோடு பகுதியில் மீனவ பொதுமக்களுக்கு கடந்த 40 ஆண்டுக்கு முன்பு அரசு குடியிருப்புகள் கட்டிக்கொடுத்துள்ளது. அந்த குடியிருப்புகளை அப்பகுதியினர் வீடுகளை புதுப்பித்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு, 21 மாடி வீடுகள், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வீடுகளை புதுப்பிக்கக்கூடாது என கூறி நேற்று வீட்டிற்கு முன்பு போடப்பட்டிருந்த ஷெட்டை அகற்ற பிச்சாவரம் வனச்சரகர் இக்பால் தலைமையில், 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சென்றனர்.
ஷெட்டை அகற்ற சென்றப்போது, வனத்துறையினரை, மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் விஜய் மற்றும் கிராம பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த, பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, வி.ஏ.ஓ., வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறை மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற இடம், கடல் புறம்போக்கிற்கு சொந்தமானது என வி.ஏ.ஓ., வனிதா தெரிவித்தார். அரசு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள இடம், வனத்துறைக்கு சொந்தமானதா அல்லது கடல் புறம்போக்கு இடமா என குழப்பம் ஏற்பட்டது.
இதுசம்மந்தமாக, புவனகிரி தாசில்தாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதைதொடர்ந்து, விரைவில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தாசில்தார் கூறியதால், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வனத்துறையினர் திரும்பிச்சென்றனர்.