/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்
/
குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்
ADDED : செப் 18, 2024 09:38 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே பழுதான குடிநீர் மோட்டரை சரிசெய்து தண்ணீர் வழங்க கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி ஒன்றியத்திற்குட்பட்ட, நடுவீரப்பட்டு அருகே பத்திரக்கோட்டை அம்பேத்கார் நகரில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள கோவில் அருகே போர்வெல் போடப்பட்டு குடிநீர் வழங்கி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக போர்வெல்லில் இருந்த மோட்டார் பழுதடைந்தது.
இதனால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை 7:50 மணிக்கு நடுவீரப்பட்டு-குறிஞ்சிப்பாடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், நடுவீரப்ட்டு எஸ்.ஐ., முகிலரசு, ஊராட்சி தலைவர் தெய்வானை சிங்காரவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உடனடியாக மோட்டார் சரிசெய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து, 8:20 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.
மறியல் போராட்டத்தில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.