/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீனவர்களுக்குள் மோதல்: மூவர் காயம்
/
மீனவர்களுக்குள் மோதல்: மூவர் காயம்
ADDED : ஆக 26, 2011 01:02 AM
கடலூர் : கடலூர் அருகே மீனவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மூவர் காயமடைந்தனர்.
கடலூர் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்தவர் திருவரசன், 24. இவரது உறவினர் சஞ்சய்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருக்கும் நத்தை பிடித்து விற்பதில் நேற்று காலை வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மாலை திருவரசன், அவரது நண்பர்கள் மற்றும் சக்தி ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டது. அதில் சக்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரவிச்சந்திரன், கார்த்தி உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் காயமடைந்த ராகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் ராஜ்குமார், திருவரசன் மூவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தாழங்குடா கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.