ADDED : பிப் 15, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : போலீசாரின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், தூக்கணாம்பாக்கம் அடுத்த அழகியநத்தம், கரைமேடு மற்றும் களையூர் கிராமங்களில் பொதுமக்களிடையே வன்கொடுமை விழுப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அழகியநத்தம் ஊராட்சி தலைவர் பொன்னப்பன் தலைமை தாங்கினார். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா, வன்கொடுமை, கல்வி மேலாண்மை, அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கரைமேடு கமல், களையூர் ஏலக்கன்னி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

