/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஷ்வ ஹிந்து பரிஷத் பயிற்சி முகாம்
/
விஷ்வ ஹிந்து பரிஷத் பயிற்சி முகாம்
ADDED : ஜன 20, 2025 11:55 PM
சிதம்பரம்; சிதம்பரத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
சிதம்பரம், கனகசபை நகரில் உள்ள தருமபுரம் ஆதீன குருமணி மண்டபத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஜெயமுரளி கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் ராமன் பங்கேற்று, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கொள்கை மற்றும் நாட்டின் கலாசாரம் ஆன்மிகம், தேசபக்தி குறித்து விளக்கி பேசினார்.
மாநில பொறுப்பாளர் கார்த்திகேயன், லட்சுமிநாராயணன், மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமரன், ரவி துரைப்பாண்டி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கிருஷ்ணசாமி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில், விஷ்வ ஹிந்து பரிஷத் கொள்கைகள் குறித்து பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.