/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தங்கம் இறக்குமதி வரி குறைக்க விஸ்வ ஜனசக்தி பேரவை மனு
/
தங்கம் இறக்குமதி வரி குறைக்க விஸ்வ ஜனசக்தி பேரவை மனு
தங்கம் இறக்குமதி வரி குறைக்க விஸ்வ ஜனசக்தி பேரவை மனு
தங்கம் இறக்குமதி வரி குறைக்க விஸ்வ ஜனசக்தி பேரவை மனு
ADDED : மார் 18, 2025 04:37 AM

கடலுார் : தங்கம் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை மனு அளித்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலத்தில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில், மாவட்ட செயலாளர் ராஜேசேகர் அளித்த மனு:
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் தங்கம் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்.
அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் விஸ்வகர்மா தொழிலாளர்களை அப்ரைசராக பணியில் அமர்த்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அனைத்து அறநிலையத்துறை கோவில்களில் காது குத்துவதற்கு விஸ்வகர்மா தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், மாநில துணைத்தலைவர் சந்திரன், உயர்மட்ட குழு உறுப்பினர் செல்வகணபதி, மாவட்ட துணை செயலாளர் செல்வம் உடனிருந்தனர்.