/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா
/
சிதம்பரத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா
ADDED : செப் 21, 2024 06:35 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடந்தது.
சிதம்பரம் காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
நகர செயலர் முத்துக்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் ராமச்சந்திரன், நடராஜன், சந்திரமவுலி, மாரியப்பன் முன்னிலை வகித்தனர். சின்ன செட்டித் தெரு மற்றும் காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் சங்க கொடியை ரவி, டாக்டர் சந்திரமவுலி ஏற்றினர். நிகழ்ச்சியில் பாலசுப்ரமணியன், சுரேஷ், திருஞானசம்பந்தம், கனகசபை, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஸ்வகர்மா யோஜனா திட்டம் பற்றி கூறும்போது, உளி, சுத்தியல் வைத்து வேலை செய்யும் 18 வகை தொழிலாளர்களும் விஸ்வகர்மாக்கள் என கூறிய, மாறுபட்ட கருத்தை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளைஞரணி துணை செயலர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.