/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள்
/
காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள்
ADDED : ஜன 08, 2025 06:16 AM

கடலுார் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக வடலுார் நகரம் உள்ளது. இங்கு புகழ்பெற்ற சத்திய ஞான சபையில் தைப்பூசத்தன்று லட்ச கணக்கான மக்கள் கூடுவர்.
அதுபோல அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனை, ரயில்நிலையம், சிட்கோ தொழிற்பேட்டை, வங்கிகள், வியாபார நிறுவனங்கள் உள்ளதால் தினசரி ஆயிரகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் முக்கிய சாலைகளை இணைக்கும் மையமாக உள்ளதால், தினசரி ஆயிரகணக்கான வாகனங்கள் நகரின் வழியாக செல்கின்றன.
விபத்துகள், குற்ற சம்பவங்கள் போன்றவற்றை கண்காணிக்க போலீசார், நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கட்டுப்பாட்டு அறையில் கண்காணித்து வந்தனர்.
அண்மையில் பெய்த கனமழையில் நான்கு முனை சந்திப்பு மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்து சரி செய்யப்படாமல் உள்ளது.
இதனால் விபத்து, திருட்டு போன்றவை நடந்தால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் ஏற்படும்.
எனவே, செயல்படாமல் உள்ள கண்காணிப்பு, கேமராக்களை விரைந்து சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.