/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.கே,டி., சாலையோர பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி: சேத்தியாத்தோப்பு அருகே அடிக்கடி விபத்து
/
வி.கே,டி., சாலையோர பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி: சேத்தியாத்தோப்பு அருகே அடிக்கடி விபத்து
வி.கே,டி., சாலையோர பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி: சேத்தியாத்தோப்பு அருகே அடிக்கடி விபத்து
வி.கே,டி., சாலையோர பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி: சேத்தியாத்தோப்பு அருகே அடிக்கடி விபத்து
ADDED : நவ 15, 2024 04:37 AM

வி.கே.டி., சாலையில், சேத்தியாதோப்பு அருகே வாலாஜா ஏரி பாசன வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், வாகனங்கள் விழுந்து விபத்துள்ளாகி வருகிறது.
சேத்தியாத்தோப்பு, நவ. 15-
வி.கே.டி., சாலை எனப்படும், விக்கிரவாண்டி-கும்பகோணம் - தஞ்சாவூர் வரையிலான 164 கி.மீட்டர் துார தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்தது. அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு பணிகள் துவங்கியது. பணிகளை விரைந்து முடிக்க, நான்கு பிரிவுகளாக பணிகளை துவக்கியது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும், பணிகள் இதுவரையில் முடியாமல், கடந்த ஏழு ஆண்டுகளாக இழுபறி நிலையிலேயே உள்ளது.
குறிப்பாக, விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வரையிலான பணிகள் முடிக்கப்படாததால், திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு இடையிலான பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, சேத்தியாத்தோப்பு பகுதியில் பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
சேத்தியாத்தோப்பு அருகே பின்னலுாரில் துவங்கி கரைமேடு பரவனாறு வரையில், வாலாஜா ஏரியின் பாசன வாய்க்கால்கள் 10க்கும் மேற்பட்டவை உள்ளது. இதன் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளங்கள் தோண்டி இரும்பு கம்பிகள் கொண்டு பில்லர் போடப்பட்டது. ஆதோடு பாலம் பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.
முக்கிய சாலையான இதன் வழியாக சென்னை, கும்பகோணம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாசன வாய்க்கால் பள்ளங்களில் இறங்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன.
சாலையில் ஒரு பகுதி மட்டுமே தார்சாலை போடப்பட்டுள்ள நிலையில், குறுக்கிய சாலையில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள், பாலம் கட்ட தோண்டிய பள்ளங்களில் இறங்கிவிடுகிறது.
எனவே நகாய் அதிகாரிகள் சாலையை நேரடி ஆய்வு செய்து, பாசன வாய்க்கால்களில் உள்ள சிறுபாலங்களை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குறுகிய சாலையால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க, மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.