/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எஸ்.பி., பரிசு வழங்கல்
/
வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எஸ்.பி., பரிசு வழங்கல்
வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எஸ்.பி., பரிசு வழங்கல்
வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எஸ்.பி., பரிசு வழங்கல்
ADDED : அக் 08, 2025 11:18 PM

பண்ருட்டி: பண்ருட்டியில் மாவட்ட அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு எஸ்.பி.ஜெயக்குமார் பரிசுகள் வழங்கினார்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி இருநாட்கள் நடந்தது.
போட்டிக்கு மாவட்ட கையுந்து பந்து கழக தலைவர் புவனேந்திரன் தலைமை தாங்கினார். கையுந்து பந்து கழக மாவட்ட செயலாளர் சண்முகம் , பண்ருட்டி நண்பர்கள் கையுந்து கழக தலைவர் பழனி முன்னிலை வகித்தனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் திருவிக்கிரமன் வரவேற்றார். போட்டியை கடலுார் எஸ்.பி.ஜெயக்குமார் துவக்கி வைத்தார். முதல் பரிசு கடலுார் அமர் அகாடமிக்கு ரூ.10ஆயிரம், பெண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.8 ஆயிரம் ரூபாய் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் வழங்கினார்.
2ம் பரிசாக ஆண்கள் பிரிவு டாடா பிரன்ஸ் அணிக்கு ரூ.8 ஆயிரம் ரூபாயும், பெண்கள் வாழப்பட்டு அணிக்கு ரூ.6ஆயிரத்தை , பெற்றோர் ஆசிரியர்கள் கழக தலைவர் ஜாகீர்உசேன் , கையுந்து கழக மாநில பொது செயலாளர் மார்ட்டின் சுதாகர் பரிசுகள் வழங்கினர்.
நண்பர்கள் கழக செயலாளர் சுகுமார் நன்றி கூறினார்.