ADDED : மே 14, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் செம்மண்டலத்தில் மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில் கிராமப்பகுதி ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. நடப்பாண்டிற்கான கோடைக்கால பயிற்சி முகாம், கடந்த மே.1ம் தேதி துவங்கியது.
கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் நிர்வாகிகள் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
கடலுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இலவச பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். கடலுார் செம்மண்டலத்திலுள்ள வரதராஜன் நகர் பூங்காவில் பயிற்சி நடக்கிறது.