ADDED : ஜூலை 24, 2025 03:41 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில், மாணவிகளுக்கு வாலிபால் பயிற்சி தரப்பட்டது.
மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை 1,100 மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என ௨௦க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.
மாணவிகளுக்கு வாரந்தோறும் திங்கள் முதல் வியாழன் வரை கபடி, கோ கோ, வாலிபால், கால்பந்து, சதுரங்கம், கேரம் உள்ளிட்ட விளையாட்டுப் பயிற்சி தரப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் கூட்டு உடற்பயிற்சி, யோகா போன்ற உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்படுகிறது.
உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வி, ரமேஷ் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். கிராமப்புற மாணவிகளுக்கு கூடுதல் நேரம் பயிற்சி கொடுத்து, குறுவட்ட மற்றும் மாவட்ட, மாநில போட்டிகளுக்கு தயார்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.