/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் வியதீபாதம்; நடராஜர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
/
சிதம்பரத்தில் வியதீபாதம்; நடராஜர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
சிதம்பரத்தில் வியதீபாதம்; நடராஜர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
சிதம்பரத்தில் வியதீபாதம்; நடராஜர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஜன 15, 2024 06:55 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் வியதீபாதம் நாளை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து நடராஜரை வழிபட்டனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழியில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில், திருப்பள்ளியெழுச்சி காலம் நடைபெறும். மார்கழி மாதத்தில் தினமும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், வியதீபாத தினத்தில், ஒரு நாள் தரிசனம் செய்தால், ஒரு மாதம் தரிசனம் செய்த பேரு கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில், வியதீபாத தினமான நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சிதம்பரத்தில் தேரோடும் வீதிகளில் வலம் வந்து, கீழவீதி நடராஜர் கோவில் வாயிலில் விளக்கேற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத நடராஜரை தரிசனம் செய்தனர்.
நேற்று பெய்த கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர். ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.