/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 24, 2025 11:10 PM

கடலுார்: இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அடுத்த ஒறையூர் கிராம மக்கள் நேற்று காலை, கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அலுவலகம் முன்பு திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் புதுநகர் போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தங்கள் பகுதியில் பட்டியலின மக்கள் 115 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். நாங்கள் இலவச மனை பட்டா கேட்டு கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
இதில், 75 குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஒப்புக்கொண்டும், இதுவரை வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, கோரிக்கை தொடர்பாக ஆர்.டி.ஓ., தலைமையில் பேசி முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.