/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம் அடிக்கல் நாட்டு விழா
/
காத்திருப்போர் கூடம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : நவ 04, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு:  சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவி ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 6 லட்சம் மதிப்பில் காத்திருப்போர் கூடம் கட்டும் பணி துவங்கியது.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணை செயலாளர் அருளழகன்,ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு, கிளை செயலாளர் மணிவேல், ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

