/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருமணமாகாத விரக்தியில் தீக்குளித்த தொழிலாளி பலி
/
திருமணமாகாத விரக்தியில் தீக்குளித்த தொழிலாளி பலி
ADDED : நவ 04, 2025 01:28 AM
நெல்லிக்குப்பம்:  தற்கொலை செய்து கொள்ள போவதாக நண்பருக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்து விட்டு, தீக்குளித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலியை சேர்ந்த மகாலிங்கம் மகன் சிவசங்கர், 34;  விவசாய கூலி தொழிலாளி. இவர் திருமணமாகாத விரக்தியில் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் 28ம் தேதி குடும்பத்தினருடன் பிரச்னை ஏற்பட்டதால் விரக்தி அடைந்த சிவசங்கர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இது குறித்து ஓட்டேரியை சேர்ந்த தனது நண்பன் தினேஷ்க்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்து விட்டு அவர் வருவதற்குள் உடலில் பெட்ரோல் ஊற்றி சிவசங்கர் தீவைத்து கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

