/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம்: எம்.எல்.ஏ., அடிக்கல்
/
காத்திருப்போர் கூடம்: எம்.எல்.ஏ., அடிக்கல்
ADDED : ஜூலை 21, 2025 05:14 AM

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சம் மதிப்பில் பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டி ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர், முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். பூமி பூஜையை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விழாவில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, வசந்தி சுதந்திரதாஸ், நிர்வாகிகள் திருஞான சம்மந்தமூர்த்தி, மாரியப்பன், விஜயன், வசந்த், பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.