/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரமுடையாநத்தம் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் திறப்பு
/
வீரமுடையாநத்தம் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் திறப்பு
வீரமுடையாநத்தம் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் திறப்பு
வீரமுடையாநத்தம் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் திறப்பு
ADDED : நவ 21, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் ஊராட்சியில் புவனகிரி ஒன்றிய நிதி 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமிசிட்டிபாபு தலைமை தாங்கி புதிய காத்திருப்போர் கூடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் செல்வராசு, வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், சுமதி முன்னிலை வகித்தனர்.
சங்கர், தில்லை, வீரபாண்டியன், அண்ணாதுரை உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.