/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம் திறப்பு விழா
/
காத்திருப்போர் கூடம் திறப்பு விழா
ADDED : ஜன 30, 2026 07:10 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டு ஊராட்சியில், சிதம்பரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் கூடத்திற்கு நேற்று திறப்பு விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்க சாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர்.காத்திருப்போர் கூடத்தை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் சுவாமி நாதன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராம் மகேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அகிலநாயகி அருள்மணி, கிளை செயலாளர் கோபிகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் அர்ச்சுனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

