sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

/

 தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

 தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

 தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்


ADDED : ஜன 30, 2026 07:09 AM

Google News

ADDED : ஜன 30, 2026 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மங்களூர் வட்டார அட்மா குழு தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மணிவேல் வரவேற்றார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ரூ., 10 லட்சத்தில் கட்டப்பட்ட விழா மேடையை திறந்து வைத்தார். தொடர்ந்து, 71 தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்களை வழங்கினார்.

வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, சிவக்குமார், விருத்தாசலம் தி.மு.க., ஒன்றிய செயலர் வேல்முருகன், நிர்வாகிகள் ராஜேந்திரன், சேகர், திருவள்ளுவன், ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமைச்சர் கணேசன் பேசுகையில், 'மாநிலம் முழுவதும் இரு மடங்கு புதிய தொழிற்பயிற்சி நி லையங்களை துவக்கி, நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டப்படுகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, படிப்பு முடிவதற்குள் வேலை கிடைத்துவிடும்,' என்றார்.






      Dinamalar
      Follow us