ADDED : அக் 30, 2025 11:17 PM

விருத்தாசலம்:  கார்குடல் ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்ட காத்திருப்பு கூடம் திறப்பு விழா நடந்தது.
கம்மாபுரம் ஒன்றியம், கார்குடல் ஊராட்சியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ரூபாயில் காத்திருப்புக் கூடம்  கட்டப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது. அ.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், மாவட்ட செயலாளர்கள் ஜெ., பேரவை உமாமகேஸ்வரன், விவசாய பிரிவு கனகசிகாமணி, கலை பிரிவு சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முனுசாமி வரவேற்றார்.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., காத்திருப்பு கூடத்தை திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார். தொடர்ந்து, துாய்மைப் பணியாளர்கள், பெண்களுக்கு இனிப்பு, புடவை வழங்கினார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர் குறிஞ்சிசெல்வன், நீலகண்டன், பாலமுருகன், சக்திவேல், சத்யராஜ், ரேகா, ரமணி, சித்ரா உடனிருந்தனர்.

