ADDED : பிப் 06, 2026 06:42 AM

கடலுார்: கடலுார் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், அலமாரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார், நெல்லிக்குப்பம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோருக்கான (காது கேளாதோர்) அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் பாபு லட்சுமணன் வரவேற்றார். அமெரிக்காவை சேர்ந்த பிரஷேதா வெங்கடேஷ் பிரபு நிதியுதவியில், பள்ளிக்கு அலமாரி வழங்கப்பட்டது.
மாவட்ட ரோட்டராக்ட் குழு தலைவர் ராசன், உதவி ஆளுநர் ஜெயசங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் பிறையோன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, கூத்தப்பாக்கம் செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி விஜய் மற்றும் கடலுார் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ரோட்டரி சங்க செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

