/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மீனவர்களுக்கு எச்சரிக்கை கடலில் 2ம் எண் புயல் எச்சரிக்கை
/
கடலுார் மீனவர்களுக்கு எச்சரிக்கை கடலில் 2ம் எண் புயல் எச்சரிக்கை
கடலுார் மீனவர்களுக்கு எச்சரிக்கை கடலில் 2ம் எண் புயல் எச்சரிக்கை
கடலுார் மீனவர்களுக்கு எச்சரிக்கை கடலில் 2ம் எண் புயல் எச்சரிக்கை
ADDED : நவ 28, 2025 04:59 AM
கடலுார்: கடலுார் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வட தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் துாரப்புயல் இருப்பதை அறிவுறுத்தும் வகையில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண் டும்.
மேலும் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.