/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ேஷர் ஆட்டோ டிரைவர்களுக்கு எச்சரிக்கை
/
ேஷர் ஆட்டோ டிரைவர்களுக்கு எச்சரிக்கை
ADDED : மே 06, 2025 12:42 AM

கடலுார்,;கடலுார் மாநகரில் ஷேர் ஆட்டோ அனுமதி பெறாத சாதாரண ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோவிற்கான 5ம் எண் ஸ்டிக்கர்களை ஒட்டி இயங்குவதாகவும், அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ேஷர் ஆட்டோ டிரைவர்கள் கடந்த வாரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து கடலுாரில் நேற்று போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார், சாதாரண ஆட்டோக்களில் முறைகேடாக ஒட்டியிருந்த 5ம் எண் ஸ்டிக்கர்களை அகற்றினர்.
அனுமதிக்கப்பட்ட பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். சாதாரண ஆட்டோக்களில் ஷேர் ஆட்டோக்களின் ஸ்டிக்கர்களை ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.