ADDED : ஜன 26, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:   கடலுார், துறைமுகம் சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், தனது பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பேருடன் நேற்று கடலுார் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
15 நாட்டிகல் மைல் துாரத்தில் சென்ற போது, நீல நிற பிளாஸ்டிக் கேன் ஒன்று மிதந்து வந்தது.
அந்த கேனை திறந்து பார்த்த போது, பிளாஸ்டிக் பையில் வெள்ளை நிறத்தில் பவுடர் போன்ற பொருள் இருந்தது.
பிளாஸ்டிக் கேனை கரைக்கு கொண்டு வந்து, கடலுார், துறைமுகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார், கடலில் சிக்கியது போதைப் பொருளா அல்லது வேறு ஏதாவதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

