/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் அம்பத்துாரை சேர்ந்தவரா
/
ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் அம்பத்துாரை சேர்ந்தவரா
ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் அம்பத்துாரை சேர்ந்தவரா
ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் அம்பத்துாரை சேர்ந்தவரா
ADDED : ஆக 18, 2025 04:16 AM

விருத்தாசலம்: ஹவுரா - திருச்சி (12663), ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 15ம் தேதி இரவு 12:30 மணிக்கு, உளுந்துார் பேட்டை ரயில்வே ஸ்டேஷனை கடக்கும்போது, 20 வயது மதிக்கத்தக்க வாலிபர், ரயிலின் குறுக்கே சென்றுள்ளார். ரயிலில் சிக்கிய வாலிபர், மேப்புலியூர் ரயில்வே ஸ்டே ஷன் வரையில் 5 கி.மீட்டர் துாரத்திற்கு ரயில் இன்ஜினில் சிக்கியபடி, இழுத்து வரப்பட்டார்.
தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ் பெக்டர் சின்னப்பன் தலைமை யிலான போலீசார் சென்று, உடலை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் பேண்ட் பாக்கெட்டில் அம்பத்துார் - விழுப்பு ரம் வரை பஸ் டிக்கெட் இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தபோது, உளுந்துார் பேட்டை டோல்கேட்டில் இருந்து வாலிபர் ஒருவர், ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து வருவது உறுதியானது.
அவர், இறந்து கிடந்த வாலிபர் தோற்றத்தில் இருப்பதால், அம்பத் துாரில் இருந்து விழுப்புரம் பஸ்சில் வந்து, உளுந்துார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் தற்கொலை செய்த கொண் டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.