/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரியில் கடும் வெயிலால் நீர் மட்டம் குறைவு
/
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரியில் கடும் வெயிலால் நீர் மட்டம் குறைவு
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரியில் கடும் வெயிலால் நீர் மட்டம் குறைவு
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரியில் கடும் வெயிலால் நீர் மட்டம் குறைவு
ADDED : ஜூன் 21, 2025 12:50 AM

சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கடும் வெயில் காரணமாக நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் துவங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் வரை 14 கி.மீ., நீளம், 5 கி.மீ., அகலமும் கொண்டது. மழைக் காலங்களில் கீழணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தடைகிறது.
ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு ஆக., செப்., மாதங்களில் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. ஏரியின் 32 மதகுகள் வழியாக காவிரி கடைமடை டெல்டா பகுதிளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை வட்டாரங்களில் 55 ஆயிரம் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஏரியில் இருந்து மெட்ரோ நிறுவனம் விநாடிக்கு 74 கன அடி தண்ணீரை பம்ப் செய்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு அனுப்பி வருகிறது.
கடந்த 4ம் தேதி வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.50 அடி தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து, சென்னை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜானகி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது கீழணையில் இருந்து வடவாற்றில் தண்ணீர் வரத்து இல்லாதது மற்றும் கடந்த நான்கு நாட்களாக கடும் வெயில் காரணமாக ஏரியில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால் ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியில் இருந்து 46.30 அடியாக குறைந்துள்ளது. அதாவது 1,465 மில்லியன் கன அடியில் இருந்து 1173 .10 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.